பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து செல்லும் வழியில் சந்தேக நபர் சில காலமாக கேரள கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபரிடமிருந்து கேரள கஞ்சா பொட்டலங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்