சட்டவிரோதமாக கடலாமைகளை கொண்டு சென்ற இருவர் கைது

-யாழ் நிருபர்-

சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை பட்டா ரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை மானிப்பாயில் வைத்து மானிப்பாய் பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர் .

மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியில் வீதிபோக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மில்றோய் உட்பட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸார் பட்டாரக வாகனமொன்றை வழிமறித்தனர்.

இந்நிலையில் வாகனத்தின் பின்புறத்தில் சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூடைகள் காணப்பட்டன, அதனை சோதனையிட்டபோது 4 கடலாமைகளை உயிருடன் கைப்பற்றப்பட்டது, அவர்கள் கடலாமைகளை விற்பனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதியை சேர்ந்த இருவரைபொலிஸார் கைது செய்ததுடன்,  அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்