
காட்டிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு
புத்தளம் குருணாகல் வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் காட்டினுல் வயோதிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம் தம்பபன்னி வீதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர். பின்னர் பதில் கடமையாற்றும் நீதவான் இந்திக்க தென்னகோன் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டதை அடுத்து குறித்த சடலத்தை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்க உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
