காதலனுடன் உல்லாசமாக இருந்த மாணவி: வீடியோ எடுத்த பொலிஸ் அதிகாரி செய்த காரியம்!

டெல்லி பிரசாந்த் விகார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது.

குறித்த மாணவி காரில் காதலனுடன் நெருக்கமாக இருப்பதை அவதானித்த ரவி சோலங்கி என்ற பொலிஸ் அதிகாரி அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, கார் அங்கிருந்து புறப்பட்டது. அந்த காரை ரவி சோலங்கி முச்சக்கரவண்டியில் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அந்த கார் காதலியின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நின்றதும், காதலி காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்த பெண் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்த போது பின்தொடர்ந்து வந்த ரவி சோலங்கி அவரை தடுத்து நிறுத்தி தான் ஒரு பொலிஸ் அதிகாரி என்று கூறி பின்னர், காதலனுடன் இருக்கும் ஆபாச வீடியோவை ரவி சோலங்கி காண்பித்து மிரட்டி ஆசைக்கு இணங்கும் படி கூறியுள்ளார்.

இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததையடுத்து சமூகவலைதளங்களில் குறித்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இறுதியில் அந்த மாணவியை ரவி சோலங்கி படியிலேயே வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

குறித்த மாணவி தனக்கு நேர்ந்த அவலம் தொடர்பாக கதறிய படி காதலனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. பின்னர், அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.