மாட்டிறைச்சி கறியில் இறந்து கிடந்த எலி

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரபல உணவு விடுதியில் மாட்டிறைச்சி கறியில் எலி இறந்து கிடந்ததுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள குறித்த உணவு விடுதியில் விவேக்குமார் என்பவர் கடந்த வாரம் குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை ஓடர் செய்துள்ளனர். இதன்போது வழங்கப்பட்ட உணவை உண்ணும் போது மாட்டிறைச்சி கறியில் எலி இறந்து கிடந்துள்ளது. உடனே அதிர்ச்சியடைந்த குடும்பம், உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த ஹோட்டல் உரிமையாளர் அந்தக் குடும்பத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் காணொளி எடுத்த விவேக்குமார் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.