1.5 இலட்சம் ரூபாயுடன் மாயமான குரங்கு!

இந்தியா – உத்தரப் பிரதேச மாநிலம் சாஹாபாத் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தின் வெளியே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை அன்று அலுவலகத்தின் வெளியே சராபத் ஹுசைன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அந்த பைக்கில் பை ஒன்றும் அதில் 1.5 லட்சம் ரூபாய் தொகைப் பணமும் இருந்துள்ளது.

இவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகே சென்ற நேரம் பார்த்து அங்கிருந்த குரங்கு ஒன்று மோட்டார் சைக்கிள் அருகே வந்து நோட்டமிட்டது. பின்னர் பணம் இருந்த பையை தூக்கிக்கொண்டு ஓடியது. இதை மோட்டார் சைக்கிள் உரிமை யாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் கவனித்துவிட்டனர். பதறிப் போன அவர் குரங்கு எங்கே சென்றது என மூச்சிரைக்க ஓடி தேடினார்.

பின்னர் தான் மாயமான அந்த குரங்கு அருகே உள்ள மரத்தில் ஏறிக்கொண்டது தெரிந்தது. பின் பெரும் போராட்டத்திற்குப் பின் அதனிடம் இருந்த பையை மீட்டு எடுத்தார் சராபத். இந்த களேபரம் அனைத்தும் வீடியோவாக பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனித விலங்கு மோதல்கள் சமீப காலமாகவே அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இந்த பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக புகார் எழுந்து வருகிறது. இது தொடர்பாக வனத்துறையிடம் அளிக்கப்பட்ட நிலையில், துணை ஆட்சியர் குரங்குகளை பிடித்து வனத்தில் விடும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வோம் என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்