
ஆண் உறுப்பை பிளேடால் அறுத்த பெண்
இந்தியாவில் பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த ஆணின் அந்தரங்க உறுப்பை தற்காப்புக்காக பெண் பிளேடால் அறுத்துள்ளார்.
பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமாகிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த இளம் பெண்ணின் கணவர் வெளியே சென்றுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்த நிலையில் இரவு 10 மணியளவில் வீட்டின் கதவை தாழிட மறந்து உள்ளே இருந்துள்ளார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த 27 வயது வாலிபர் ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் பதறிப்போன பெண் அந்த நபரை தடுக்க முயன்றுள்ளார். தடுக்க முடியாத நிலையில் அருகே இருந்த ஷேவிங் பிளேடால் அந்த நபரின் அந்தரங்க உறுப்பை அறுத்துள்ளார்.
அந்த நபர் காயமடைந்து துடித்து போகவே பெண் அக்கம் பக்கத்தினரை அழைத்து சத்தம் எழுப்பினார். குரல் கேட்டு கிராமத்து மக்கள் வருவதற்குள் அந்த நபர் தப்பியோடினார்.
இருப்பினும் பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக பங்கா பகுதி பொலிஸார் தெரிவித்தனர்.
