சொத்து தகராறு : மாமியாரின் காதை கடித்த மருமகள் (Video)

குஜராத்தை சேர்ந்த சூரத் பகுதியில் இடப்பிரச்சனை தொடர்பாக மாமியார் மருமகள் இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் மாமியாரின் காதை மருமகள் கடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குறித்த வீடியோவில் மாமியாரின் காதுப்பகுதியில், கன்னத்தில் என பலமாக பற்களால் மருமகள் கடித்துள்ளார். இதற்கிடையில் ஒரு ஆண் இவர்களின் சண்டையை பிரித்து வைக்க முயற்சிக்கும் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.மேலும் அதே வீடியோவில் ஒரு ஆண் இந்த சண்டையையே கண்டு கொள்ளாமல் அமர்ந்திருப்பதும், குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி திரிவதும் பதிவாகியுள்ளது.

அத்துடன் அந்த பெண் மீது சூரத் நகர பொலிஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பசந்த் கெடியா என்ற ட்விட்டர் பயனர் இந்த வீடியோவில் மாமனார் சண்டையை தடுப்பதும், கணவன் அமைதியாக அமர்ந்திருப்பதும், இன்னொருவர் வீடியோ எடுப்பதும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் பலர், அந்த பெண் குழந்தையின் மனநிலையை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது என்று பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.