விண்வெளியில் நாசா வளர்க்கும் அபூர்வ பூ!

நாசா விண்வெளி சார்ந்த அபூர்வப் படங்களை அவ்வப்போது தனது அதிகாரபூர்வ பக்கங்களில் வெளியிடுவது வழக்கம். இந்த படங்கள் பார்ப்பதற்கு மிக அற்புதமாகவும்இ அதிசயமாகவும் நமக்கு தோன்றும். அதே போன்றுஇ விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகள் முன்பை காட்டிலும் தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது. அந்த வகையில்இ எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும்படி பூக்களை விண்வெளியில் வளர்த்து சாதனை செய்துள்ளது நாசா. இதை நிச்சயம் யாராலும் நம்ப முடியாதுஇ ஆனால் இது உண்மை தான்.

மிகவும் சாத்தியமற்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்து, எப்படியாவது அதை சாத்தியப்படுத்தி காட்டுவது தான் நாசாவின் சாதனையாக உள்ளது. விண்வெளியில் மனிதர்கள் செல்வதற்கே பல சிரமங்கள் உள்ளது. இந்நிலையில் அங்கு பூக்களை வளர செய்வது என்பது மிக சவாலான ஒன்றாகும். நாசா விண்வெளியில் வளர்ந்துள்ள பூவை பற்றி ஜூன் 13 அன்று, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி, ‘ஜின்னியா’ என்று அழைக்கப்படும் இந்த விண்வெளி பூவை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வளர்க்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்வெளியில் வளர்க்கப்பட்ட ஜின்னியா பூ, வெளிர் ஆரஞ்சு இதழ்களுடன் பார்ப்பதற்கு அழகாக உள்ளது.

நாசாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக்ஸ் போட்டுள்ளனர். மேலும், பல ஆயிரம் கமெண்ட்ஸ்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த விண்வெளி பூ மிகவும் ஆச்சரியப்படுத்துவதாகவும், பார்ப்பதற்கு அழகாக இருப்பதாகவும் பலர் கூறியுள்ளனர்.மேலும், சிலர் “உயிரற்ற இடத்தில் பூவை பூக்க வைப்பது என்பது நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக இருக்கிறது” என்று கூறியுள்ளனர்.

விண்வெளியில் தாவரங்களை பற்றிய ஆய்வுகளை நாசா 1970களில் இருந்து நடத்தி வருகிறது. 2015ம் ஆண்டு விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்க்ரேன் (Kjell Lindgren) என்பவரால் தொடங்கப்பட்ட இந்த குறிப்பிட்ட தாவரங்களை பற்றிய சோதனை, சிறப்பான முடிவுகளை தந்துள்ளது. அதன்படி, விண்வெளியில் சுற்றுப்பாதையில் இந்த ஜின்னியா பூக்களை வளர்ப்பதன் மூலம், மைக்ரோ கிராவிட்டியில் தாவரங்களின் வளர்ச்சி இருக்கும் என்பதை இதில் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களுக்கு செல்வதற்கு தேவையான உணவுகளை இதன் மூலம் பெறுவதற்கான சிறந்த மைல்கல்லாக இருக்கும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

தற்போதுஇ சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்வெளி தோட்டமாக நாசா மாற்றியுள்ளது. இதே போன்று, நாசா விண்வெளி வீரர்கள் கீரை, தக்காளி மற்றும் சிலி மிளகாய்கள் போன்வற்றையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர். இந்த அற்புதமான ஆய்வு மூலம் நாசா பூமிக்கு அப்பாலும், மனிதர்களுக்கான வாழும் அமைப்பை உருவாக்க முடியும் என்று தெரிகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்