இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெர்லுஸ்கோனி மிலான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில்வியோ பெர்லுஸ்கோனி 1994ஆம் ஆண்டுஇ முதன்முதலாக பிரதமராக பதவியேற்றார்.
அத்துடன், அவர் 2011ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமராக செயற்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்