வாரத்தில் 6 நாட்களும் 700 ஆண்களுடன் உடல் உறவு கொண்ட பெண்!
வாரத்தில் 6 நாட்களும் பாலியல் உறவுக்காக ஆண்களை தேடியிருக்கிறேன் என்றும், கிட்டத்தட்ட 700 ஆண்களுடன் உடல் உறவு வைத்திருக்கிறேன் என்றும் அவுஸ்திரேலிய நாட்டு தொலைக்காட்சி பிரபலம் மனம் திறந்துது கூறியுள்ளார்.
இதைப் பற்றி வெளிப்படையாக சொல்ல தான் ஒருபோதும் வெட்கப்படவில்லை என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் தான் பாலியல் உறவுக்கு அடிமையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய நாட்டின் பிரபல தொலைக்காட்சி பிரலமாக வலம்வருபவர் பெலிண்டா, இவர் 2017 ஆம் ஆண்டு புகழ்பெற்ற அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான தி பேச்சிலர் அவுஸ்திரேலியா என்ற நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்,
இந்நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங்களை அவர் ஷோ யூ ஆர் கிராப் மேட் என்ற ரேடியோ ஷோவில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அவர் கொடுத்துள்ள அந்த பேட்டியில் தன்னைப் பற்றி பல சுவாரஷ்யங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
என் வாழ்க்கையில் நான் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன், நான் சந்தித்த மிகப்பெரிய பிரச்சினை எதுவென்றால் நான் பாலியலுக்கு அடிமையாக இருந்ததுதான்.
அன்றாடம் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தேன்,
அதனால் ஒரு காலத்தில் மிக மோசமான கெட்ட மனிதர்களுடன் சவகாசம் வைத்திருந்தேன், 8 ஆண்டுகளுக்கு மேலாக போதையின் பிடியில் சிக்கியிருந்தேன், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் அதிலிருந்து நான் மீண்டுள்ளேன்,
போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டாலும் பழைய நினைவுகள் காயங்கள் அடிக்கடி வந்து செல்கிறது. நான் பாலியலுக்கு அடிமையாக இருந்ததை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.
நான் எத்தனை பேருடன் உறவு வைத்திருக்கிறேன் என்பதற்கு கணக்கே இல்லை, ஆனால் அவர்களின் எண்ணிக்கை நிச்சயம் 700 க்கு மேல் இருக்கும், பாலியல் உறவுக்காக ஆண்களைத் தேடி வாரத்தில் 6 நாட்கள் கூட இரவு விடுதிகளுக்கு செல்வதை நான் வாடிக்கையாக வைத்திருந்தேன்,
பெரும்பாலான ஆண்கள் நான் என்ன வேண்டுமென எதிர்பார்க்கிறேனோ, அதையே அவர்களும் என்னிடம் கேட்பார்கள் ஒவ்வொரு தருணத்திலும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள், அந்த விஷயத்தில் அவர்கள் மிகவும் நல்லவர்கள்.
ஆனால் நான் இப்போது குணமடைந்துவிட்டேன், நான் குணமாகும் வரை எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்ததை நான் உணரவேயில்லை, நான் குணமடைந்த பின்னரும் சில குணப்படுத்த முடியாத உளவியல் அதிர்ச்சிகள் எனக்கு இருக்கத்தான் செய்கிறது.
தற்போது சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை, மோசமான வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது, உடலுறவை நாம் மிகவும் தவறான அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம், அது தற்காலிக இன்பம்தான், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செக்ஸ் அடிமைத்தனம் எனது வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருந்தது, எனது தொழிலையே அது பாதித்தது, இப்போது நான் அதிலிருந்து விடுபட்டு விட்டேன், குணமடைந்து விட்டேன், நான் பாலியல் உறவில் ஈடுபட்டு 15 மாதங்கள் கடந்து விட்டது,
இப்போதும் எனக்கு பாலியல் உறவு ஆசை இருக்கிறது, நான் நிச்சயம் பாலியல் உறவில் ஈடுபடுவேன், ஆனால் எனக்கு யார் ஒத்து வருகிறார்களோ அவர்களுடன் நான் உறவு கொள்வேன், இவ்வாறு பெலிண்டா கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்