
லண்டனில் பிரபல சாமியார் கைது
லண்டன் பார்னெட் (Barnet) பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிவருகின்ற ஒரு பிரபல்யமான சாமியரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள் மூவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து கொலின்ல் பகுதி பொலிஸார் நேற்று சனிக்கிழமை இவரை கைதுசெய்து கடந்த 24 மணிநேரமாக விசாரணைக்கு உட்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த சாமியார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை உறுதியப்படுத்திய பொலிஸ் வட்டாரங்கள், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன என்பது பற்றிய தகவல்களை வெளியிட மறுத்திருந்தார்கள்.
மேலும், இந்தச் சாமியாரை மையப்படுத்திய தீவிர பாலியல் முறைகேட்டுக் காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் அந்தக் காணொளிகளை அவரது தரப்பு மறுத்திருந்தது.
தற்போது இவருக்கு அதிக நிதியுதவியை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாமென்பதால் இவரை பிணையில் எடுப்பதற்கு அவருக்கு நெருக்கமான சிலர் தீவிர முயற்சியெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, கடந்த சில வாரங்களாக குறித்த சாமியரது காணொளிகள் என்று கூறப்பட்டு, சில ஆபாச காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகிவந்தன.
தென்னிந்திய தொலைக்காட்சிகள் சிலவும் அந்தச் சாமியார் பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்களை தமது செய்தி அறிக்கைகளில் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
