சோமாலியாவில் மர்ம பொருள் வெடித்ததில் 30 பேர் பலி
சோமாலியா தெற்கு பகுதி ஷாபெல்லி என்ற இடத்தில், கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் கிடந்த மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், சிறுவர்கள் உட்பட சுமார் 30 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், சுமார் 50 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கடந்த காலத்தில் உள்நாட்டு போரின் போது வீசப்பட்டு மண்ணில் புதைந்த குண்டு, தற்போது வெடித்தது தெரியவந்துள்ளது. இதனிடையே சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உணவகம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 3 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
உணவகத்தில் இருந்த சுமார் 80 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான அல் ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் ராணுவம் மற்றும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்