
ரயில் மோதி ஒருவர் பலி!
கொழும்பு ஹோமாகம வளவ்வ சந்தியில் கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு நேற்று புதன்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹபரகட ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
