இன்றைய நாளில் ஜூன் 8

இன்றைய நாளில் ஜூன் 8

உலக மூளை புற்றுநோய் தினம் : மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகத் தீவிரமான உடல்நல கோளாறுகளை விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதனை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், மூளைக் கட்டியால் உலகம் முழுவதிலும் கணிசமான எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றிய விவரங்களையும், இதற்கான கூடுதல் ஆய்வு தேவை என்பதை வலியுறுத்துவதற்காகவும் ஜூன் 8ம் தேதி அன்று உலக மூளைக்கட்டி தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலுமே மூலையில் ஏற்படக்கூடிய கட்டிகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க பல்வேறு நிகழ்வுகள் மூலம் நடத்தப்படுகிறது.

June

உலக பெருங்கடல் தினம் : உலகப் பெருங்கடல்கள் தினம்இ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அனைத்து வயதினரும் தாங்களே தலைவராக மாறி, பொறுப்பேற்று கடல் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்துவதை தடுக்க, குறைக்க மற்றும் நிறுத்துவதற்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை குறைப்பது மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தகூடிய தேவையான நடவடிக்கை எடுப்பது பற்றிய விழிப்புணர்வை பரப்புகிறது.

ஜூன் 8 – தேசிய சிறந்த நண்பர்கள் தினம் : நமக்கு ஆதரவாக இருபவர்களை நினைவுபடுத்துவதற்கும், அவர்களின் நட்பைப் போற்றுவதற்கும் ஜூன் 8 அன்று தேசிய சிறந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்