மத சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கும் நீடித்தது விளக்கமறியல்

மதம் சார்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வௌியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நதாசா மற்றும் புரூணோவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நதாசா, புரூணோ இருவரும் இன்று செவ்வாய்கிழமை கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்க  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்ட்அப் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பௌத்த மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்