
இன்று பரீட்சை எழுதும் மாணவி குளித்துவிட்டு வரும் போது பாலியல் துஷ்பிரயோகம்
நிட்டம்புவையில் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த நபரொருவர், அம்மாணவி கட்டியிருந்த டவளைஅவிழ்த்து , பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
குறித்த மாணவி நேற்று செவ்வாய் கிழமை இரவு 11 மணியளவில் குளித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதை தொடர்ந்து அம்மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்றும் மாணவி என்பதுடன் இன்று புதன் கிழமை நடைபெறும் பரீட்சைக்கு அந்த மாணவியால் தோற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை சந்தேக நபர் துஷ்பிரயோகத்திற்கு ஈடுபடுத்தும் போது சத்தமாக அலறியதை தொடர்ந்து மகளின் அலறல்சத்தம் கேட்டு அவரது தாயார் ஓடோடி வந்தமையால் அம்மாணவியை அவ்விடத்திலேயே விட்டு விட்டு, சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
சந்தேக நபரை அடையாளம் கண்டு கொண்ட தாயும் மகளும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும்பெண்கள் விவகாரப் பணியக அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்யும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
