
இளம் நீதிபதியாகும் இலங்கை வம்சாவளி பெண்
இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் சிறுபான்மை இன நீதிபதியாகவும் வெள்ளையர் அல்லாத இளைய நீதிபதி என்ற அடிப்படையில் மூன்றாமவராகவும் இலங்கை வம்சாவளிப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஆயிஷா ஸ்மார்ட் (வயது – 34 ), என்பவரே இங்கிலாந்தின் வடகிழக்கில் இந்த உயர்பதவிக்கு தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிஷா இது தொடர்பில் தெரிவிக்கையில் இங்கிலாந்தில் ஒரு நீதிபதி ஆவதற்கான செயல்முறை சிக்கலானது, இரண்டு தேர்வுகள், பயிற்சி மற்றும் ஒரு நேர்காணல் ஆகியவற்றை உள்ளடக்கியது.அத்துடன் இறுதி ஒப்புதல் மன்னரால் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்தச் செயல்முறைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இலக்குடன் செயற்பட்டு அதில் வெற்றி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
