
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் சம்பந்தமாக கலந்துரையாடல்!
-கிண்ணியா நிருபர்-
தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் சம்பந்தபாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவை கொழும்பில் உள்ள அமைச்சில் வைத்து திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பூரணமாக தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்பொழுது, கிழக்கு மாகாணத்தில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும் பல வருடங்களுக்கு முந்திய ஆளணி வெற்றிட பட்டியலே காட்டப்பட்டுள்ளதினால் விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக்கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் பலர் வெளி மாகாணங்களுக்கு நியமிப்பதற்கு பட்டியலிடப்பட்டுள்ளமை சம்பந்தமாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் பொழுது நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட விடயங்களிலுள்ள நியாயங்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் விரைவில் வழங்கப்படவுள்ள நியமனத்தில் அவ்வெற்றிடங்களை முடியுமான அளவு சமப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
