
ஆண்கள் முன்பு பெண்கள் அழுதால் …
பொதுவாக ஒருவர் அழும் போது ஒவ்வொரு விதமாக அதை எதிர்கொள்வார்கள். சிலர் சமாதானம் செய்வார்கள்இ சிலர் ஆறுதல் வார்த்தை கூறுவார்கள்இ சிலர் கேலி செய்யலாம்இ சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் நினைப்பார்கள்; அது போலஇ ஒரு பெண் ஆண்கள் முன்னே அழும் போது அதை வெவ்வேறு விதமாக நினைத்துக் கொள்ளுவார்கள். பெண்ணின் அழுகையை ஆண்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் அல்லது என்ன நினைப்பார்கள் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ப்ரீ-மென்சுரல் சிண்ட்ரோம் : காரணமே இல்லாமல் ஒரு பெண் அழுகிறாள் எனில்இ அதற்கு ப்ரீ-மென்சுரல் சிண்ட்ரோம் ஆகவும் இருக்கலாம். PMS என்பது மாதவிடாய் நாட்களுக்கு முன்பு ஏற்படும் மனநிலை மாற்றங்களைக் குறிக்கிறது. அதாவதுஇ பீரியட்ஸ் நாட்களில் ஏற்படும் மூட்-ஸ்விங்க்ஸாக இருக்கலாம் என்று பெரும்பாலும் நினைப்பார்கள்.
உங்களை பரிதாபமாகப் பார்ப்பார்கள்: நீங்கள் எவ்வளவு மோசமான நிலையில் அல்லது தீர்க்கவே முடியாத பெரிய பிரச்சனையில் சிக்கி இருந்தாலும்இ வேறு வழியே இல்லாத நிலையில் மனதில் இருப்பதை அழுகை மூலம் வெளிப்படுத்தும் போதுஇ ஆண்களின் முன்னே அழும் பொழுது பரிதாபமாகத்தான் நினைப்பார்கள்! “ஐயோ பாவம்…” என் முன்னே அழுகிறாளே என்று மிகவும் பரிதாபப் படுவார்கள்.
அதிர்ச்சி அடைவார்கள்: பொதுவாகவே அமைதியாக இருக்கும் ஆண், எந்த சூழ்நிலையாக இருந்தாலும், நீங்கள் அழும் பொழுது மிகப்பெரிய அதிர்ச்சி அடைவார்கள். நீங்கள் எதற்காக அழுகிறீர்கள், என்ன காரணமாக இருக்கும் என்பதை பற்றி முதலில் சிந்திக்க மாட்டார்கள்.
எப்படி தப்பிப்பது என்று யோசிப்பார்கள்: பொதுவாகவே ஒரு நபர் அழும் பொழுது, சிலருக்கு அதை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாது. இது பெரும்பாலான ஆண்களுக்கும் பொருந்தும். ஒரு பெண் அழும் போது எப்படி சமாதானம் செய்வது, என்ன பேசுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. எனவே அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் இருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று தப்பிப்போவதற்கான வழிகளைத்தான் யோசிப்பார்கள் அல்லது செயல்படுவார்கள்.
குற்ற உணர்ச்சி ஏற்படும்: ஒரு ஆண் முன்பு, பெண் அழும் போது, அந்த ஆண் மீது தவறு இருந்தாலும், இல்லை என்றாலும், பெண் அழுவதை தாங்கிக் கொள்ள முடியாது; எனவே அவர்களுக்கு பெரும்பாலும் குற்ற உணர்ச்சி ஏற்படும். பெண் அழுகைக்கு நான் தான் காரணம் என்று நினைப்பார்கள்.
பெண்கள் இன்னும் வலிமையாக இருக்க வேண்டும்: அழுவது என்பது பெரும்பாலும் பலவீனமாக கருதப்படுகிறது. எனவே ஒரு பெண் அழுதால், ஏன் அழுகிறார்? அதைப் பற்றி பலரும் நினைப்பதில்லை. அதே போலே, ஆண் முன்னே பெண் அழும் போது, பெண் இன்னும் தன்னை வலிமையானவளாக மாற்றிக் கொள்ள வேண்டும் இவ்வளவு பலவீனமாக இருக்கக்கூடாது என்று நினைப்பார்கள்.
பெற்றோர்களுடன் சண்டை போட்டிருப்பார் : ஒரு பெண் அவரின் பெற்றோருடன் தான் வசிக்கிறார்கள் என்பதை தெரிந்திருக்கும் ஒரு ஆணின் முன்னே அழும் பொழுது, பெரும்பாலும் அப்பெண் பெற்றோருடன் ஏதோ பெரிதாக சண்டை போட்டு இருக்கிறார், அதனால்தான் அழுகிறார் என்று நினைப்பார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
