குடிக்கு அடிமையான தந்தை: மகளின் உருக்கமான முடிவு

இந்தியாவில் தமிழகத்தின் வேலூர் குடியாத்தம் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையால் சிறுமி ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சின்னராஜா குப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா (வயது – 16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.

விஷ்ணு பிரியாவின் தந்தை கூலித்தொழிலாளி.குடிக்கு அடிமையான இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டையிட்டுள்ளார்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஷ்ணு பிரியாஇ குடிக்க வேண்டாம் என தந்தையிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.

எனினும் தந்தையால் குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியவில்லை, ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விஷ்ணு பிரியா தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அதில், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் , எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும் என எழுதிவைத்துள்ளார்.

குடிக்கு அடிமையான தந்தை மகளின் உருக்கமான முடிவு