காதலனுடனே வாழ தனது மனைவியை அனுப்பி வைத்த கணவன்

இந்தியாவில் கணவர் ஒருவர் திருமணமான 20 நாட்களில் தனது மனைவியை அவரது காதலனிடம் ஒப்படைத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்திற்குட்பட்ட மனாட்டு பகுதியை சேர்ந்த சனோஜ்குமார் சிங் என்பவரிற்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரி என்ற இளம் பெண்ணிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் திருமணத்திற்கு முன்னதாகவே பிரியங்கா குமாரி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஜிதேந்திர விஸ்வகர்மா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலை அறிந்த பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன் பிரியங்கா குமாரியை சனோஜ்குமாருக்கு மணம் முடித்து வைத்துள்ளனர்.

 

திருமணம் செய்த பிரியங்கா குமாரியோ தனது காதலன் ஜிதேந்திராவை மறக்க முடியாமல் காதலனுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியும் வந்துள்ளார். இறுதியில் இருவரும் வீட்டை விட்டு ஓடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட பிரியங்கா குமரியின் கணவர் மனைவியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து தனது மனைவியை முழு விருப்புடன் காதலனுடன்  அனுப்பி  வைத்துள்ளார்.