
வெப்பம் அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவித்தலின் அடிப்படையில் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் அடிப்படையில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
