
மட்டு.கல்லடி கடற்கரை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம்
-மட்டக்களப்பு நிருபர் –
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாநகர சபையினால் கல்லடிக் கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டமொன்று இன்று சனிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
மாநகர சபை ஆணையாளர் எஸ்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இத்தூய்மைப்படுத்தல் நிகழ்வில்இ வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்இ மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்இ முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள்இ மாநகர சபை பணியாளர்கள்இ பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்லடி கடற்கரையை அண்டிய பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் என்பன அகற்றப்பட்டன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்






