சமஸ்டி அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத்தாடல்

 

-கிண்ணியா நிருபர்-

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவர்கள்,  இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சமஸ்டி அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத்தாடல் திருகோணமலை மாநகராட்சி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் சமஷ்டி அதிகாரம் எனும் தொனிப்பொருளின் கீழ் செயலமர்வு இடம் பெற்றது.

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா, சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.