கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபைக்கு சொந்தமான வாகனம் தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு செல்வதாக முறைப்பாடு

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபைக்கு சொந்தமான வாகனத்தை தனிப்பட்ட பாவனைக்காக கொழும்புக்கு சுற்றுலா சென்றமை தொடர்பிலான மோசடி விசாரனைக்காக தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மாகாண முதலமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தியதற்கு இணங்க குறித்த சங்கத்தினரை  திருகோணமலையில் உள்ள மாகாண முதலமைச்சின் தற்போதைய பதில் செயலாளருடன் கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இது தொடர்பாக ஆராய்வதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஐ.எம்.எஸ்.ஏ.மௌலானா ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்,

“வீதி பயணிகள் போக்குவரத்து சபைக்கு சொந்தமான வாகனத்தை ஒரு அரச அதிகாரி தனிப்பட்ட பாவனைக்காக கொழும்புக்கு சென்றுள்ளார், இது தொடர்பில் முறைப்பாட்டினை முன்னர் செய்துள்ளோம் தற்போது முதலமைச்சின் பதில் செயலாளர் எங்களை அழைத்தார் கலந்துரையாடினார்,  எனவே இவ்வாறான மோசடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்,  இது மாத்திரமல்ல பல மோசடிகள் இடம் பெறுகின்றன”, என்றார்.