கிழக்கு மாகாண நிறுவன தலைவர்களுடன் ஆளுனர் கலந்துரையாடல்

 

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் விசேட கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம்பெற்றது.

தற்போதைய திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இந் நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.