
படைப்புளு தாக்கத்தினால் மட்டு. வாழைச்சேனை விவசாயிகள் பாதிப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் கமநல பிரிவுக்குட்ட சேம்பையடி, தவணை கண்டம் மற்றும் கட்டுக்காட்டு, சோலையமடு கண்டத்திலும் படைபுளு தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
2023ம் ஆண்டுக்கான தற்போது செய்கை பண்ணப்படும் சிறுபோக, நெல்செய்கையில் சில இடங்களில் வேளாண்மை செய்கை முற்றிலும் சேதம் அடைந்துள்ளதனை பார்க்க கூடியதாக உள்ளது.
இப்புழுவானது இளம் பயிர்களின் இலைகளை முழுமையாக உண்பதுடன் முதிர்ச்சி அடைந்த பயிர்களின் தண்டு பகுதியினை விட்டு இலைப்பகுதியினை உண்டு பின் வயலில் உள்ள களைகளுக்குள் பரவி களைகளையும் உண்கின்றது.
இப் புழுவின் தாக்கத்தினால் நெற் பயிர்கள் நில மட்டத்துடன் போகிறது இதனால் பயிர்களின் வளர்ச்சி குன்றி காணப்படுவதுடன் அறுவடை காலமும் பின் செல்கின்றது. இதனால் தாங்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதாகவும், களைநாசினிகளின் விலையேற்றத்தை ஈடு செய்யமுடியாது என்றும் கடன்களை பெற்று களைநாசினிகள் தெளித்தும் புளுவின் தாக்கம் குறையவில்லையெனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
