இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பாலி எனப்படும் இக்பால் என்ற பயங்கரவாதி பாகிஸ்தான் பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் தெஹ்ரீக்-இ-தலிபான் (TTP) அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்த நபர் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதி பயங்கரவாதம், கொலை மற்றும் பொலிஸ் அதிகாரிகளைக் கடத்துதல் போன்ற வழக்குகளில் தேடப்பட்டவர் என்று கூறப்படுகிறது.