16 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது மேயர் : மாமியாருக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்

இலத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் 65 வயது முதியவர் 16 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள விடயமானது இன்று பரபரப்பான விடயமாக பேசப்பட்டு வருகின்றது.

கணவன்-மனைவி இடையே இப்படியொரு வயது வித்தியாசத்தில் யாராவது தன்னை விட 49 வயது இளையவரை திருமணம் செய்து கொள்வார்களா என்பது ஆச்சரியாமாகவேதான் இருக்கும்.

பிரேசிலில் உள்ள அரகாரியா நகர மேயரான 65 வயதான ஹிசாம் {ஹசைன் டெஹைனி என்பவரே 16 வயது சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேயர் தன்னை விட 49 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தது கொண்டுள்ள தொடர்பாக வயது காரணமாக மட்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறவில்லை, அதற்குப் பின்னால் நேரடியாக பல தொடர்புடைய பெரிய காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரேசிலிய சட்டத்தின் கீழ், 16 வயது சிறுமிகள் திருமணம் செய்யலாம், ஆனால் அவர்களின் பெற்றோரின் சம்மதத்துடன் தான் அது நடக்க வேண்டும். முதியவர் திருமணம் செய்து கொண்ட பெண், அந்த நகரின் மிகுந்த அழகு பெண்ணாக இருந்துள்ளார்.

இந்த திருமணத்தால் அந்தப் பெண்ணின் தாய் எவ்வளவு நன்மை அடைந்தார் என்பது பற்றித்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சிறுமியின் தாயார், மரிலின் ரோட், கல்வி அமைச்சகத்தில் கடைநிலை ஊழியராக வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவரது மகள் மேயருடன் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவருக்கு உயர் பதவியும் அதிக சம்பளமும் வழங்கப்பட்டது.

இந்த திருமணம் நகரத்தின் துணை மேயர் மற்றும் சிவில் பதிவேட்டின் தலைவரால் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 வருட அனுபவத்தின் காரணமாகவே மாமியாருக்கு இப்பதவி கிடைத்துள்ளதாக மேயர் அலுவலகத்தினால் கூறப்பட்டாலும், இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாய் மாறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்