9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. .

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிசேக் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் களத்தில் இறங்கினார். மயங்க் அகர்வால் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 10 ஓட்டங்களும், கேப்டன் மார்க்ரம் 8 ஓட்டங்களும் , ஹேரி ப்ரூக் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் பொறுப்புடன் விளையாடிய அபிசேக் சர்மா 36 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்களை எடுத்தார்.

தொடக்க வீரரான கேப்டன் டேவிட் வார்னர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து பிலிப் சால்ட்டுடன் இணைந்த மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களை சேர்த்தார். இருவரும் 2வது விக்கெட்டிற்கு 112 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சால்ட் 59 ஓட்டங்களில் ஆட்டமிழக்க மிட்செல் மார்ஷ் 63 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மணிஷ் பாண்டே 1 ஓட்டமும் , பிரியம் கார்க் 12ஓட்டமும் எடுததனர். கடைசி நேரத்தில் 2 சிக்சர் 1 பவுண்டரியுடன் அக்சர் படேல் 14 பந்தில் 29 ஓட்டங்கள் எடுத்தார். வெற்றிக்காக தீவிரமாக போராடிய டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 188 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்து 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்