வேலையில்லா திண்டாட்டம் : வழிபாட்டு தலங்களை நாடும் இளைஞர்கள்

சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இருப்பதால், வழிபாட்டு தலங்களில் இளைஞர்கள் கூட்டம் அதிக அளவு காணப்படுகிறது.

சீனாவில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பொருளாதார நிலை சற்று மந்தநிலையில் காணப்படுகிறது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி அந்நாட்டில் பட்டதாரிகளை விட முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். இதனால், அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வேலை கிடைக்காத காரணத்தால்  அந்நாட்டு இளைஞர்கள் பெரும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, மனதை அமைதிப்படுத்த சீன இளைஞர்கள் வழிபாட்டு தலங்களில் அதிக அளவு குவிந்து வருகின்றனர்.