பெற்றோரினால் கைவிடப்படும் சிசுக்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட கூட்டம்

தாயினால் கைவிடப்படும் 3 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விசேட கூட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்படி, சிசுக்களை இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் வகையில், அரச வைத்தியசாலைகள் மற்றும் மாகாண நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் கண்காணிக்கப்படும் 339 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் கிளைகள் அமைப்பது மற்றும் தற்போதுள்ள சட்ட நிலைமைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, நீதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கைவிடப்பட்ட சிசுக்களின் பெற்றோர்கள் பற்றிய தகவல்களின் இரகசியத்தன்மையை பேணுவதற்கு அல்லது ஏதேனும் ஒரு வகையில் அவற்றைப் பதிவு செய்வதற்கு ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என மேலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்