மட்டு.கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

 

மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை நடைபவனி இடம்பெற்றது.

இந்த நடைபவனியானது மட்டக்களப்பு பிள்ளையாரடியிலிருந்து காந்தி பூங்கா வரை இடம்பெற்றது.

இந்த நடைபவனியின் நோக்கம், உதயம், தரிசனம், ஓசானம் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதி சேகரிப்பு செய்வது, என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதன்போது சேகரிக்கப்படும் பணமானது ஒன்லைன் ஊடாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்