கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது

களுத்துறை வடக்கு கெலிடோ வீதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து இச்சடலம் இன்று வியாழக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவரின் மகள் சடலத்தை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

ஆயுர்வேத வைத்தியர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி ஒன்று குறித்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்