மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

-ஆர்.நிரோசன்-

நோன்புப்பெருநாள், உயிர்த்த ஞாயிறு, சித்திர வருட பிறப்பு என ஒற்றுமையையும் பரஸ்பரத்தையும் பேணும் நோக்கில் முஸ்லீம், கிறிஸ்தவம், இந்து  மத ரீதியான நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை காலை 8.30மணியளவில் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பொது மைதானத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வுகள் மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் உப பீடாதிபதி நிதியும் நிர்வாக்கமும் எஸ்.என்.ஏ. அரூஸ்,  உப பீடாதிபதி கல்வி மற்றும் தர மேம்பாடு திருமதி.டபிள்யூ. மணிவண்ணன், உப பீடாதிபதி தொடறுரு கல்வி  திருமதி.டி. சுந்தரராஜன் மற்றும் இவ் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர்கள், 2022 ஆண்டிற்கான பயிலுனர் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாக்கு ஓட்டம், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், கிடுகு பின்னுதல், மாவூதிக் காசெடுத்தல், தேங்காய் திருவுதல், கம்பு சுத்துதல், கையால் நீர் சேர்த்தல், யானைக்கு கண் வைத்தல் போன்ற பல விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன்,  இப் போட்டிகளில் பங்குபற்றி கல்விக்கல்லூரியின் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்