
மட்டு.கிண்ணையடி அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை கிண்ணையடி அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 10 தினங்கள் உற்சவ நிகழ்வுகள் நடைபெற்று 05.05.2023 வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாளில் தீர்தோற்சவம் இடம்பெறும்
விசேட உற்சவ நிகழ்வுகளாக 30.04.2023 ஊர்வல திருவிழாவும், 03.04.2023ல் திருவிளக்கு பூஜையினை தொடர்ந்து, 03.04.2023 அன்று வேட்டைத் திருவிழாவும், 04.04.2023 அன்று காலை தேர்த்திருவிழாவும் நடைபெற்று, 5.5.2023 அன்று மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.
இதேவேளை இவ் ஆலயத்தில் விழா காலங்களில் ஆன்மீக சொற்பொழிவுகள், நடைபெறவுள்ளன.
திருவிழா நிகழ்வுகள் யாவும் ஆலய தலைவர் இ.இலங்கேஸ்வரன் தலைமையில், ஆலய பிரதம குரு ஜோதிட மாமணி சிவஸ்ரீ சி.கு.அருள்பிரகாசக் குருக்களின் வழிகாட்டலில் இடம்பெபெறும்
பிரம்மோற்சவ பிரதம குருவாக சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குரு முதல்வர் பிரதிஷ்டா பூஷணம் ஆன்மீக அருள்ஜோதி பிரதிஷ்டா கலாநிதி மஹாராஜ ராஜகுரு கலாநிதி ஸ்ரீ ஜயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையிலான குருமர்களினால் பிரமோற்சவப் திருவிழா நடாத்தப்படும்.
விழாக்க் காலங்களில் அடியார்கள் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபட்டு திருவருள் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.



