கருமலையூற்று மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை -கருமலையூற்று பெரியமலைக்குடா பிரதேசத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலாளர்களர்களது இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த அனுமதியை மீண்டும் பெற்றுகொள்வது தொடர்பான கலந்துரையாடல் விமானப்படைத் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,  விமானப்படைத் தளபதி எயர்மார்ஸல் சுதர்சன பத்திரன ஆகியோருக்கிடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, கருமலையூற்று பெரியமலைக்குடா பிரதேசத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலாளர்கள் தமது மீனவத்தொழிலை நீண்டகாலமாக செய்து வந்ததாகவும், தற்பொழுது விமானப்படையினாரால் இடைநிறுத்திவைக்கப்பட்டிருப்பது நியாயமற்ற விடயம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை பற்றி மிக விரிவான விளக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இதன்போது எடுத்துரைத்தார்.

குறித்த விடயம் தொடர்பில், மிக விரிவாக ஆராயப்பட்டதுடன் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாகவும்,  விமானப்படைத் தளபதி எயர்மார்ஸல் சுதர்சன பத்திரன  உறுதியளித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்