
மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே வாக்குவாதம் : ஒருவர் உயிரிழப்பு
மிரிஹான ஜூபிலி போஸ்ட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதில் பிடகொட்டே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவருடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவர் முச்சக்கரவண்டியின் மீது ஏறி சாரதியின் கழுத்தை நெரிக்க முற்பட்ட போது, மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கார் மீது மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞன் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
