விபத்தில் பெண் உயிரிழப்பு : குழந்தை படுகாயம்

அம்பலாங்கொடை-பொல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  4 ½ வயதுடைய குழந்தையொன்று காயமடைந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் மற்றும் குழந்தை பயணித்த மோட்டார் சைக்கிள் மீது எதிர் திசையில் பயணித்த லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை,  குழந்தை பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.