
நடுவானில் தீ பற்றிய விமானம்
அமெரிக்காவில் பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் தீ பற்றியுள்ளது.
ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் இயந்திரம் மீது பறவை மோதியதால் இயந்திரத்தில் தீ பற்றியுள்ளது. தீ பற்றியது குறித்து அறிந்த விமானி விமானத்தை ஒஹியோ விமான நிலையத்திலேயே தரையிறக்கினார்.
இதனை தொடர்ந்து மாற்று விமானம் மூலம் பயணிகள் பினிக்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
