மர்மமான முறையில் இறந்தவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

மரதன்கடவல பிரதேசத்தில் வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மரதன்கடவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த வீட்டில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மரதன்கடவையில் வசிக்கும் 65 வயதுடைய திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், சடலம் கண்டெடுக்கப்படும் போது அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இறப்புக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்