இன்றைய வானிலை முன்னறிவித்தல்

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று சனிக்கிழமை மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மற்றும் அந்த மாகாணங்களில் சில இடங்கள் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும், மேல் மாகாணத்தில் காலையிலும் மழை பெய்யக் கூடும் என்றும் அந்த அறிவிப்பு மேலும் தெரிவிக்கிறது.