கூண்டை விட்டு வெளியேறிய சிங்கங்கள்: பார்வையாளர்கள் பதட்டம்
சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது இரண்டு சிங்கங்கள் கூண்டைவிட்டு வெளியே வந்து பார்வையாளர்களை அச்சுறுத்தியுள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் பயிற்சியாளர்கள் இரண்டு சிங்கங்களுடன் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக கூண்டில் இருந்து தப்பிய சிங்கங்கள் இரும்பு கூண்டு அருகே நடமாடின. இதனால் மக்களிடையே சிறிது நேரம் அமைதியின்மை நிலவியது.
பின்னர் சிங்கங்கள் மீண்டும் கூண்டிலேயே அடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் சிங்கங்கள் யாரையும் தாக்கவில்லை.
மேலும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் சர்க்கஸ் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்