
நீர்வீழ்ச்சியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
-பதுளை நிருபர்-
எல்ல – இராவனெல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இராவனெல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் வீதியின் பாலத்திற்கு கீழ் இருந்து நேற்று புதன்கிழமை மாலை சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் எல்ல பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
