
முட்டை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
நுகர்வோர் விவகார அதிகாரசபை முட்டையின் அதிகபட்ச விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின்படி, ஒரு கிலோ வெள்ளை முட்டையின் விலை 880 ரூபாவாகும். அதன்படி ஒரு வெள்ளை முட்டையின் விலை 44 ரூபா.
இதேவேளை ஒரு கிலோ சிவப்பு முட்டையின் விலை 920 ரூபாவாகும் . அதன்படி ஒரு சிவப்பு முட்டையின் விலை 46 ரூபா.
அதன்படி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்படப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்ய கூடாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.

