முறைப்பாட்டுக்கு நடவடிக்கை இல்லை : மாநகர சபை முன் தனி ஒருவர் போராட்டம்

 

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்று  உள்ளதாகவும்,  அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும், இதனை மாநகரசபையிடம் பல்வேறு தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனாலேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபருடன் யாழ். மாநகரசபை அதிகாரிகள் கலந்தாலோசித்த போதும், அவர் தொடர்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.