நிறைக்கு ஏற்ப முட்டை விற்பனை

 

முட்டை ஒன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விதித்துள்ள நிலையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சந்தையில் முட்டை விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி வெள்ளை முட்டை ஒன்றுக்கு 44 ரூபாவும், சிவப்பு முட்டை ஒன்றுக்கு 46 ரூபாவும் கட்டுபாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நேற்று திங்கட்கிழமை புறக்கோட்டையில் முட்டைகள் நிறைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை குறித்த கடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், மே மாதம் முதலாம் திகதி முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட குறைவாகவே முட்டை விற்பனை செய்யப்படும் எனவும் அதன் பின்னரும் முட்டையின் விலை படிப்படியாக குறையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சரத் ரத்நாயக்க நேற்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்