திருத்த வேலைகளுக்காகவே பெயர் பலகை கழட்டப்பட்டது

ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள புன்னக்குடா பெயர் பலகை உட்பட சில பெயர் பலகைகள் திருத்த பணிகளுக்காகவே கழட்டப்பட்டது என மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவிக்கையில், ஏறாவூர் பிரதான வீதியில் கழட்டப்பட்ட இரு ஊர்களினது பெயரினை குறிக்கின்ற பெயர்பலகைகள் திருத்தப் பணிகளுக்காகவே கழற்றப்பட்டு, மீண்டும் பொருத்தப்பட்டது.

இப்பெயர் பலகைகள் மீண்டும் பொருத்தப்பட்ட பிறகு அதற்காக எந்தவொரு நிகழ்வையும் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளவில்லை, என மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக சமூக ஆர்வலர் R றிக்னாஸ் என்பவர் மின்னல்24செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் குறித்த பெயர்பலகையை அமைச்சர் நஸீட் அஹமட் பொருத்தி வைக்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.