தென் கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படகில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெருமளவில் இருந்துள்ளதாக கடற்படையினர் தெரியவித்தள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய பல நாள் மீன்பிடிக் கப்பல் கைப்பற்றப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருட்களின் அளவு மற்றும் பெறுமதி இன்னும் கணக்கிடப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்